செவ்வாய், 23 ஜூலை, 2013

முகநூலும் அகவாழ்வும் 
(தழுவல் கட்டுரை : நன்றி - பணி. இராஜ்குமார் )

"நீ என்ன புத்தகம் படிக்கிறாய் எனச்சொல், நீ யார் என நான் சொல்கிறேன்?" இந்த வார்த்தைகளை நான் சிறுவனாய் இருந்தபோது சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வளர்ந்து இளமாணக்கனாக பள்ளிகளில் இருந்தபோது "நீ உன் நண்பர்கள் யார் என்று சொல், நீ யார் எனச்சொல்கிறேன்" எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இன்று நான் எனது மாணாக்கரைப் பார்த்துக் கூறுவது இதுதான்: "நீ உன் முகநூலில் (Facebook) பதிவது என்ன? என்று சொல், நீ யார் எனச் சொல்கிறேன்"
முகநூல் வாழ்வின் அங்கமாகிவிட்டது. சிலருக்கு அதுவே வாழ்வாகிவிட்டதுஅது நமது கட்டுபாட்டிற்குள் இருக்கிறதா? இல்லை நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிறோமா? நாம் நமது நண்பர்களை தேர்ந்தெடுக்கிறோமா? அல்லது நமது நண்பர்களை தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறோமா? (People you may know). காலையும் மாலையும் எவ்வேளையும் முகநூல் என்றிருக்கிறோம், ஆனால் முகம் தெரியும் உறவுகளை காண நேரம் இல்லை. வாருங்கள்! சற்று நேரம் முகநூலோடு அலசுவோம் முக முகமாய்!

"வீடு தோறும் வாசல் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும்"
இன்றைய இளம் தம்பதிகளிடையே சண்டை போடுவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. விலைவாசி, குழந்தை பராமரிப்பு, வேலை பளு, உறவினரோடு தொடர்பு, இன்னும் விவாதப் பொருட்கள் ஈராளம். இன்று இவற்றோடு சேர்ந்துள்ள புதிய விவாதப் பொருள்: முகநூல் பயன்பாடு. படித்த, நடுத்தர வர்க்க இளம் தம்பதிகளிடையே அதிக குழப்பங்களையும், உறவுச் சிக்கல்களையும் ஏற்படுத்துவதில் மற்ற எல்லாவற்றையும் விட முகநூலுக்கு அதிக பங்களிப்பு உண்டு. 
ஏன் இப்படி? என நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இருக்கும் குழப்பங்கள் போதாதென்று இது வேறா? என நினைப்பவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி செய்தி: உலகில் 400 மில்லியன் முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு "முகநூல்" தான் தொடக்கமும் முதலும் முடிவும் எல்லாமும். 
அமெரிக்க மணமுறிவு வழக்கறிஞர்கள் மேற்கொண்ட 2012 புள்ளி விபரத்தின் படி மணமுறிவுக்கு வரும் ஐந்தில் நான்கு தம்பதியினர் முகநூலையே மணமுறிவுக்கு காரணமாக சொல்கின்றனர். ஆழ்ந்த புரிதலோடு தொடங்கிய திருமணம், மேற்போக்கான முகநூல் தொடர்புகளால்  சீரழிகிறது என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. இதை எப்படி எதிர்கொள்வது? 

கனி தராத பணி:
ஒரு மாதத்தில் முகநூலில் மட்டும் 500 மில்லியன் நிமிடங்களை நாம் செலவிடுவதாக ஒரு புள்ளி விபரம் அதிர்ச்சித் தகவல் தருகிறது. அதனால் என்ன? எனக் கேட்பது புரிகிறது. ஒவ்வொரு நிமிடம் நாம் முகநூலில் மூழ்கும் போதும், நாம் நம் உறவுகளிடமிருந்து தனிமை படுத்தப்படுகிறோம்.முகநூல் நேரம் நம் உறவுகளை முறியடிக்கும் நேரமாக மாறிவிடுகிறது. நேரம் போவதே தெரியாமல் மணிகணக்கில் கனி தராத இப்பணியில் மூழ்கிடுவோர் ஏராளம்.
என்ன செய்யலாம்? 
கணவன் மனைவிக்கிடையே ஒரு புரிதல் இருப்பது அவசியம். முகநூலே வேண்டாம் என சொல்லவில்லை, அதில் மூழ்கும் நேரத்தை நிர்ணயுங்கள். முகநூல் நேரத்திலும் கணவன் அழைப்பையோ மனைவியின் குரலையோ புறக்கணிக்காதீர்கள். இந்த முகநூல் நம்முடைய சொல்லற்ற தனிமையைத்தான் உருவாக்குகிறது. தங்களின் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், பெற்றோர்கள் இவர்களிடம் பேசுவதற்கான நேரத்தை ஒரு போதும் முகநூல் பொருட்டு தொலைத்து விடாதீர்கள். 

முகநூல் நண்பர்கள்:
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமும் தேவையும் இருக்கிறது. அதை அவர்கள் தனது மனைவி, மக்களிடையே உணர்ந்துகொள்ளத் துவங்கும்போது அது அதிர்ஷ்டமாகிறது. மாறாக, முகநூல் நண்பர்களிடையே, முகம் தெரியா இணைய நண்பரிடையே, பழைய காதலர், ஒருதலைக் காதலர், பால்ய நண்பர்கள் என முகநூல் மூலம் நம் வாழ்வில் நுழைந்து குடும்ப வாழ்வை சீரழிக்க பலர் இருந்தால் அதுதான் நமது துரதிர்ஷ்டம். 
என்ன செய்யலாம்? 
"உனது நண்பர்கள் யார் என்று சொல் 
நீ யார் என்று நான் சொல்கிறேன்"
இது பழமொழியானாலும் முகநூலைப் பொறுத்தமட்டும் பெரிதும் பொருந்தும். இளம் கணவன், மனைவி இருவரும் யாரை நண்பர்களாக முகநூலில் அழைப்பு விடுக்க வேண்டும்?, யாருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்? அல்லது மறுக்க வேண்டும் என்ற அதீத புரிதலோடு செயல்பட வேண்டும். "துஷ்டனை கண்டால் தூர விலகு" என சும்மாவாச்  சொல்லிச்  சென்றார்கள் பெரியவர்கள். துஷ்டனை முகமுகமாய் பார்த்தாலும் சரி, முகநூலில் பார்த்தாலும் சரி. துஷ்டன் எனக் குறிப்பிடுவது கணவன் மனைவியின் ஆழ்ந்த புரிதலுக்கு, ஆத்மார்த்த உறவுக்கு இடையூறாய் வருபவர்கள் யாராயிருந்தாலும் தான். 
(njhlUk;)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக