'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது'
இது புனித பவுல் கிருத்துவ சமூகங்களில் வேலை செய்யாது ஏமாற்றி பிழைப்பவர்களுக்காக சொல்லப்பட்டது என நாம் நினைக்கிறோம். உண்மையில், நமது குடும்ப வாழ்க்கையில் இவ்வரிகள் மிக பொருந்தும்.
பெரும்பாலும், வீட்டு வேலைகளை அம்மாக்களுக்கும், மனைவியருக்கும் அர்ப்பணித்துவிட்டு, ஹாயாய் கால் மேல் கால் போட்டு பொழுதானைக்கும் மொபைல், டிவி என மாறடிக்கும் நபரானால், உங்களுக்கு தான் இந்த வரிகள் சொல்லப்பட்டுள்ளது.
'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது'
வீட்டில் நான்:
இப்படித்தான், பல வேளைகளில், என் மகளிடம், சொல்லி சொல்லி. மனதில் ஒரு உறுத்தலை ஏற்படுத்தி வேலை வாங்குவது எனது இயல்பாகி போனது. அதில் எனக்கு உள்ள பெருமிதம் அலாதி.
அப்படி இறுமாந்திருந்த ஒரு நாள், என் இல்லத்தரசி என்னிடம் வந்து, 'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது', சரிதானே? என்றாள். நானும், தோராயமாய், புரிந்தும் புரியாமல் 'ஆம் மிகச்சரி' என்றேன். அப்ப இன்னைக்கு சோறு வடிக்குறது உங்க வேலைனு சொல்லிட்டு போய்ட்டாள். தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது, அந்த வேலை பளு.
ஊருக்கு உபதேசம்:
'ஊருக்கு உபதேசம் செய்வது' எவ்வளவு எளிது என அப்போதுதான் உணர்ந்தேன். ஓர விழிகளில், எனது மகள் என்னை பரிகாசம் செய்வது தெரிந்தும் தெரியாதது போல் சமாளித்து கொண்டேன்.'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது' என்ற வரிகள் கேலியாய் என்னைப் பார்த்து சிரிப்பது போல உணர்ந்தேன். பவுலடிகளார் மீது செம்ம கோபம் வந்தது. இருந்தாலும் 'சோறு முக்கியம்' என நினைத்துக் கொண்டு, அரிசி பானையை எடுத்துக் கொண்டு, அரிசி மூட்டை நோக்கி நடந்தேன்.
உங்களுக்கு சவால்:
'அரிசி உலை வைத்து சோறு வடிப்பது' என்ன அவ்வளவு பெரிய சவாலான வேலையா? ன்னு உங்கள் மனதின் குரல் எனக்கு கேட்கிறது.
சொல்கிறேன் கேளுங்கள்:
வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கிட வேண்டும்.
ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என மனக்கணக்கு தேவை.
எத்தனை முறை சாப்பிடுவார்கள்? சிலர் ஒரே முறை சாப்பிடுவது உண்டு. பலர் கொஞ்சம் கொஞ்சமாய் பலமுறை சாப்பிடுவதும் உண்டு.
மிகக் கச்சிதமாய் அளவுக்கு சோறு வடிக்க கூடாது.
மிகக் குறைவாயும் வடித்து பற்றாக்குறை வந்து விட கூடாது.
மிக அதிகம் சோறு வைத்து வீணாக்கவும் கூடாது.
ரொம்ப குழைக்கவும் கூடாது
ரொம்ப வெரையாகவும் இருக்கக்கூடாது.
தண்ணி அளந்து ஊத்தணும்
பொங்கி வழியவும் கூடாது
அடி தீயவும் கூடாது
அங்குமிங்கு போனாலும் கவனம் முழுக்க அரிசி பானை மீது இருக்க வேண்டும்
இவ்வளவு விஷயம் இருக்கு.
'அரிசி வடிப்பது' ஆய கலைகளில் 65 ம் கலைனே சொல்லலாம். சற்று தவறினாலும், வடித்த சோறு முழுக்க 'அந்தோ கதி தான்'
இனிமேல் யாராவது அரிசி வடித்து சோறு போட்டால், தெய்வமாக பாருங்கள். 'உண்டி கொடுத்தோன், உயிர் கொடுத்தோன்' அல்லவா?
பானை என்னும் போதி மரம்:
பானையில் தண்ணீர் கொதித்ததும், களைந்த அரிசியை போட்டேன்.
முதலில் அசைவே இல்லை.
பின்னர் அரிசி மணிகள் ஒவ்வொன்றாக அசைய ஆரம்பித்தன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக குதிக்கத் தொடங்கின. அரிசியின் மேல் கீழான சுழற்சி வேகமெடுக்கத் துவங்கியிருந்தது. சூடு அடியில் இருந்து அரிசியை அலைக்கழிப்பதை பார்க்கும்போது, எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பு கக்குவது தான் நினைவுக்கு வந்தது. கீழிருந்த அரிசி மிக வேகமாக மேல் தள்ளப்பட்டு, மீண்டும் கீழ் இழுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் சுழற்சியில் அரிசி மணிகள்.
அரிசி சற்று வெந்து சோறாக மாற மாற அதன் சுழற்சியில் சற்று தாமதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முழுதும் சோறானதும், அதன் சுழற்சி முற்றிலும் நின்று விடுகிறது. பானைக்குள் நெருப்பின் அரவணைப்பில், அரிசி சோறாகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின், சோறை வடித்து பரிமாறுகிறோம்.
சோறு ரெடி...
இந்த அரிசி பானைக்குள் தான் எத்தனை வாழ்க்கைப் பாடங்கள்:
நாம் தான் அரிசி இந்த பாடத்தில்.
நம்மை சூழும் தண்ணீர்: நமக்கு கிடைத்துள்ள உறவுகள், நட்பு வட்டாரங்கள், பணி நிமித்த தொடர்புகள். இந்த தண்ணீர் இல்லாமல் அரிசி சோறாக முடியாது. அதே சமயத்தில், தண்ணீர் சரியான அளவு தான் சோறு பதமாக உதவும். அதிகமானாலும் குறைந்தாலும், ஆபத்துதான்.
நெருப்பு - நமது அனுபவங்கள். இந்த அனுபவங்கள் நமது உறவுகளோடும், நட்புகளோடும், பணி நிமித்த தொடர்புகளோடும் தான் சேர்த்து நம்மை சோறாக உரு மாற்றும். இந்த நெருப்பு, நம்மை தொடக்கத்தில் புரட்டி எடுத்தாலும், கொஞ்ச நேரத்தில் சோறாக மாறுகிறது.
இந்த மாற்றம் தாம் 'பக்குவம்'
அரிசி சோறாகும் பக்குவம் அரிசிக்கு அரிசி மாறுபடும்.
மனிதர்களும் அனுபவத்தை ஏற்றுக்கொண்டு, அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்கும்போது நாம் பக்குவப் படுகிறோம்.
இன்னொரு முக்கியமான விஷயம்... 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிறார்கள். சரிதான். சோற்றுக்கு வேண்டுமானால் இந்த சொலவடை பொருந்தும். கட்டாயம் மனிதருக்கு அல்ல.
ஒவ்வொரு மனிதனின் அனுபவங்கள் வேறு
ஒவ்வொரு மனிதனும் பக்குவப்படும் காலமும் வேறு
ஒவ்வொரு மனிதனின் உறவும், நட்பும், பணி தொடர்புகளும், அவனுடைய பக்குவத்தை நேரடியாகவே பாதிக்கின்றன.
அதனால், 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற கூற்று, பொருந்தா கூற்று தானே மனிதர்க்கு.
சாப்புட போறேன் மன நிறைவோடு, மனைவியோடும் மகளோடும்...
தட்டில் சோறு என்னை பார்த்து சிரித்தது.
மிகவும் அருமையான, ஆழமான சிந்தனை. யதார்த்தமான, எள்ளலான தொணியில், இனிமையான அனுபவப் பகிர்வு. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். 😊👌👍
பதிலளிநீக்குநன்றி நண்பரே, தங்களின் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.
நீக்குArumai
நீக்குவாழ்க்கைக்கு உகந்த நல்ல அனுபவ பகிர்வு, சிந்தனை. மிக சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே. தங்களது வாழ்த்துக்கு நன்றி
நீக்குஅருமையான பதிவு. படித்து மகிழ்ந்தேன்.இப்பதிவு ஏற்பட நானும் ஒரு காரணம் என்று நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்கு(பின் குறிப்பு: நான் தான் ஓர விழியில் பரிகாசம் செய்த மகள்)
நான் தூக்கி வளர்த்த என் கண்ணம்மா....
நீக்குநமக்கு சோறு தான் முக்கியம் 😝 😝மன்னிக்கவும்... சோறும்ம்ம் தான் முக்கியம் 😊😊 அருமையான அனுபவ பகிர்விற்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றிகளும். 🫂👩❤️👨🫂
பதிலளிநீக்குஎன் இனிய மனையாளுக்கு நன்றிகள்
நீக்குநல்ல விளக்கம். பல தரப்பட்ட மக்களை நாம் எவ்வாறு புரிதல் வேண்டும் என எடுத்துக்காட்டுடன் விளக்கியதற்கு நன்றி. அருமையான பதிவு 👌👌👍
பதிலளிநீக்குநன்றி. பெயரோடு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
நீக்கு"This description beautifully captures the art of cooking rice! The way it links cooking rice to people around us is thought-provoking. After reading this, I'm reminded of the precision and calculation that goes into everyday tasks – and yes, we girls are indeed smart in our calculations!"
பதிலளிநீக்குசகோ, தங்களது வாழ்த்தும், கருத்துக்களும் எனக்கு பெரும் உந்துதல். நன்றி
நீக்குசிறப்பான சிந்தனை. வளர்க உங்களின் எழுத்து பணி💐💐💐
பதிலளிநீக்குநன்றி. பெயரோடு பதிவு செய்யுங்கள்.
நீக்குதங்களின் ஒவ்வொரு கருத்துக்களம் படிப்பவரின் மனதில் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் சகோ
பதிலளிநீக்குநன்றி சகோ. உங்கள் கருத்து இல்லாமல் நிறைவு இல்லை.
நீக்குஅருமை. அருமை - அரிசியை சூழும் தண்ணீர் மற்றும் நெருப்பு நமக்கு பொருந்தும். ஆனால் அரிசி வேகும் நேரம் மனிதருடன் பொருந்தாது. நானும் தெய்வம் தான் :) சோறு நான் தான் சமைக்கிறேன். :)
பதிலளிநீக்குஜான் அவர்களே, நீங்கள் சாதாரண தெய்வம் அல்ல. பெருந்தெய்வம். நல்ல சமையல் கலைஞர் என்றேன்.
நீக்குதங்களின் அழகான ஆழமான கருத்துகளில் அரிசியாக இருந்தவரை சோறாக்கிவிட்டீர்கள் சகோ🙏 வாழ்த்துகள் 💐🙏
பதிலளிநீக்குநன்றி சகோ. உங்கள் கருத்து நிறைவு தருகிறது
நீக்குஅரிசி பொங்குவது எனும் ஒரு சிறிய நிகழ்விலிருந்து பல ஆழமான கருத்துக்களை பகர்ந்து உள்ளீர்கள்.... மிக எளிமையான நடையில் சிந்தனையை தூண்டும் ஆழமான பதிவு....பாராட்டுகள் 👏👏💐💐
பதிலளிநீக்குநன்றி சகோதரி. தங்களின் வாழ்த்தும் கருத்தும் உத்வேகம் தருகிறது.
நீக்குSo much of values in such a small observation....... beautifully analysed and correlated....
பதிலளிநீக்குYour feedback meana a lot.
நீக்குNammai choozhum thanneer....loved the reflection...an eye opener
பதிலளிநீக்குThanks Priya for refering specific parts. It helps a lot to improve.
பதிலளிநீக்கு