சனி, 20 டிசம்பர், 2014

நீ வேண்டும்!


உன் பெயரை மட்டும் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டும்.
உன் கண்களை மட்டும் கால நேரம் தெரியாமல் பார்க்க வேண்டும்.
உன் கைகளை மட்டும் கடைசிவரை  பிடித்திருக்க வேண்டும்.
உன் காதுகளில் எப்போதும் உனக்கு மட்டும் கேட்பதுபோல் பேச வேண்டும்.
உன் சுவாசம் எப்போதும் என் கன்னம் சூடேற்ற வேண்டும்.
உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு கணமும், உன் எண்ணம் உயிர் உள்ளவரை நிலைக்க வேண்டும்.
உனக்கு ஒரு நாள் முன்பே நான் இறக்க வேண்டும்.
நீயின்றி ஒரு நாளும் இல்லை என்று வாழ வேண்டும்
காலையில் நீ விரும்பும் முதல் குரலாய் நான் இருக்க வேண்டும்.
இரவில் நீ பார்க்கும் கடைசி காட்சியாய் நான் இருக்க வேண்டும்.
நீ விரும்பும் அனைத்திலும் நானிருக்க வேண்டும்.
நீ வெறுக்கும் அனைத்தையும் நான் வெறுக்க வேண்டும்.
என்  கண்ணீர்  உன்  கரங்களால் காய வேண்டும்.
உன்  கண்ணீர்  என்  கன்னத்தில்  வழிய  வேண்டும்.
துவளும்போது  தோள்  கொடுத்து  தாங்க  வேண்டும்.
மனம் கனக்கும்போது உன் தோள் மீது தூங்க வேண்டும்.
மடி சாய்ந்து
முகம் பார்த்து
உச்சி மோர்ந்து
நெத்தி முத்தமிட்டு
தலை கோதி
விரல் கோர்த்து
கதை பேசி
இரவு பகலாகுமட்டும்
பகல் பாதியாகுமட்டும்

உன்னோடு இணைந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக