பசித்தது…
மொபைல் எடுத்து order செய்ய முயன்று கொண்டிருந்தேன்.
என்னைச் சுற்றி 450 உணவகங்கள், 45,000 க்கும் மேற்பட்ட உணவு வகைகள். ஆனால் ஆர்டர் history பார்த்தால், 5 உணவகங்கள், 10 உணவு வகைகளுக்கு மேல் நான் தாண்டியதில்லை.
மீண்டும் ஏதோ அந்த ஐந்தில் ஒன்றில். அந்த 10 வகை உணவில் ஒன்றை order செய்துவிட்டு, நேரத்தைப் பார்த்தேன். 30 நிமிடங்களுக்கு மேலாக காட்டியது. படிக்கலாம் என புத்தகத்தை புரட்டினேன். முதல் notification மணி ஒலித்தது.
‘Your order is accepted’ என்று.
பார்த்துவிட்டு படிக்க தொடங்கினேன். சில நிமிடங்களில் மீண்டும் ஒரு மணி:
‘Searching for delivery partners nearby’ என்று.
பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்து எங்க விட்டோம் என்று யோசிக்கையில் அடுத்த மணி:
‘Found a Delivery partner’ என்று.
தொடர்ந்து அந்த அரை மணி நேரத்தில் பல முறை மணி ஒலித்தது.
‘Partner on the way’
‘Delivery Partner reached the restaurant’
‘Delivery partner waiting to pick up’
‘Delivery partner picked up the delivery’
Delivery partner on the way to deliver’
இதற்கிடையில் டெலிவரி பார்ட்னர் மெசேஜ் வருகிறது: ‘ I’m on my way to your place’ என்று.
இந்த இடைபட்ட நேரத்தில்,
Zomato Gold விளம்பரங்கள்,
You won a reward விளம்பரம்
அது இதுன்னு அந்த அரை மணி நேரத்தில் 20-30 மணிகள் ஒலித்தபடியே இருந்தது. கடைசிவரை புத்தகத்தை படித்த பாடில்லை.
*இன்னொரு கதை கேளுங்க*
1961 இல் Kurt Vonnegut எழுதிய Harrison Bergeron என்ற சிறுகதை 2081 ம் ஆண்டில் அமெரிக்க வாழ்க்கையை சித்தரிப்பதாகும். இந்த கதையில் அரசாங்கம், மக்களில் எந்த ஒரு தனி நபரும் புத்திசாலித்தனம், அழகு அல்லது வலிமை காரணமாக மற்றவரை விட உயர்ந்தவர்களாக உணரக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்துகிறது.
கதைமாந்தன் புத்திசாலி; சுய சிந்தனை உடையவன். அதனால் அவன் காதுகளில் ஒரு கருவி பொருத்தப்பட்டு, ஒவ்வொரு 20 நொடிகளுக்கு பலவகை ஒலிகளை எழுப்பி, அவனுடைய சிந்தனை சங்கிலியை உடைக்கிறது. தொடர்ந்து சிந்திக்க விடாமல் அது ஒலி எழுப்பி சிந்தனையை மழுங்கடிக்கிறது.
*என்ன தொடர்பு?*
1961 இல் எழுதப்பட்ட கதைக்கும், 2025 இல் நான் Zomato வில் ஆர்டர் செய்ததற்கும் என்ன தொடர்பு?
இதுதான் இக்கட்டுரையின் சாராம்சம்.
*கற்பனை நிஜமாகிறது!*
கற்பனைக்கதையில் சிந்தையை சிதறடிக்க, உற்பத்தித் திறனை உருகுலைக்க பொருத்தப்பட்ட அந்த ஒலி எழுப்பும் கருவியை, இன்று நாம் பயன்படுத்தும் மொபைலோடு ஒப்பிட்டு பார்க்கவும். அரை மணி நேரம் படிக்க விடாமல் எத்தனை notifications.
*கணக்கு பார்ப்போம் வாங்க!*
Zomato வில் அரை மணிக்கு 30-40 notifications என்றால், இதைபோல் எத்தனை app கள், எத்தனை notifications கள்.
ஒரு நாள் உங்கள் வாட்ஸப்பில் வரும் notifications மட்டும் கணக்கெடுத்து பாருங்கள்.
Personal chat notifications
Group chat notifications
update notification
status notification
அப்பப்பா தலை சுத்துது
இன்னும் whatsapp போல மற்றய ஆப் கள்.
Tik Tok, Youtube, Pinterest, Instagram, Twitter, Gmail, OTTs, நியூஸ் apps என ஏராளமான App கள் ஏராளமான Notifications.
ஒரு சராசரி இளைஞரின் மொபைலில், ஒரு நாளைக்கு ஏறக்குறைய 192 முறை மணி ஒலிப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
நாம் தூங்கும் நேரத்தை தவிர்த்து கணக்கிட்டால், விழித்திருக்கும் ஒரு மணி நேரத்தில் 11 மணி ஒலிக்கிறது
அதாவது ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை மணி ஒலிக்கிறது.
இது சராசரி இளைஞரின் கணக்கு. சமூக வலைதளங்களில் தீவிரமாய் ஈடுபடும் நபருக்கு கணக்கு வேறு: ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு மணி ஒலித்தால் அது மிகையல்ல.
*மழுங்கடிக்கும் மணிகள்*
1961 இல் எழுதப்பட்ட கதையில் புத்தியை மழுங்கடிக்க இந்த ஒலி அவர்கள் காதில் எழுப்பப்பட்டது.
இப்போது ஒலிக்கும் இந்த notification மணிகளும் அப்படித்தான்.
நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் சாவு மணி தான் இந்த notifications.
*யோசிங்க…*
நமது கவனத்தை திசை திருப்ப இத்தனை முயற்சிகள்.
பலமுறை இந்த ஒலி கேட்டு செய்கின்ற வேலையை விட்டு மொபைலில் தொலைந்தவர்களில் நாமும் ஒருவர்தான்
எதற்கு மொபைல் எடுத்தோம் என்பதையே மறந்து விட்டு, பல மணி நேரம், அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்த தருணங்கள் எத்தனை எத்தனையோ!
மொபைல் போனின் ‘இருப்பு’ போதும், நம் கவனத்தை குலைக்க. நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அருகிருந்தாலே அது நம் தலைக்குள் இடம் பிடித்து விடும்.
எந்த ஒரு வேலையை செய்வதானால், மொபைல் போனை தொலைவில் வையுங்கள்.
உங்கள் சிந்தனை சங்கிலியை உடைக்கும் அழைப்பு மணிகளை, முற்றிலும் தவிருங்கள்.
உங்கள் சிந்தனைக்கு சாவு மணி அடிக்கும் மணியை கழட்டி எறியுங்கள்.
சிந்தியுங்கள் தடங்கலின்றி.
‘டிங்’
தொலைப்பேசி( கைப்பேசி) தொல்லைப்பேசியாகிவிட்டது என்பது உண்மை. Avoid online purchase💯🤣 So avoid மழுங்கவுக்கும் மணிகள்💯👍🤣😛
பதிலளிநீக்குகருத்து பகிர்வுக்கு நன்றி
நீக்குஉங்கள் கருத்துகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குசமூக ஊடகம் நம்முள் நாம் புத்திசாலிகள் என்ற ஒரு போலியான படிமத்தை உருவாக்கியுள்ளது; ஆனால் உண்மையில் அது இளைஞர் தலைமுறையை சமூகத்திலிருந்து தூரமாக்கி விட்டது. சில நேரங்களில் சமூக ஊடகம் இல்லாமல் என் வாழ்க்கை நின்றுவிட்டது என நினைக்கிறேன், ஆனால் உண்மையான நிலை என்னவென்றால், என் வாழ்க்கை அதில்தான் சிக்கிக்கொண்டிருக்கிறது. நெட்வொர்க் இல்லாமல் நான் தன்னம்பிக்கை குறைந்ததும் அமைதியிழந்ததும் உணர்ந்திருக்கிறேன்.
அப்படியென்றால் இனி வரும் காலங்களில் மொபைல் போன் மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு தனி மருத்துவமனையும் தனி மருத்துவரும் உருவாக்கப்பட வேண்டும்😜💯👍 அயகோ!
நீக்குதாங்கள் சொல்லுவது போன்ற நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை
நீக்குA powerful reminder of how constant notifications quietly break our focus and control our attention.
பதிலளிநீக்குA thought-provoking writeup how our phones disrupt our minds more than we realize.
Thanks for your personal reflection.
பதிலளிநீக்குஇது அவசியமான notification... அருமை.
பதிலளிநீக்குநன்றி தம்பி
நீக்குI too often get annoyed with notifications, especially when I'm about to taste food. They seem to pop up at the most inconvenient times, making it difficult to focus on anything else like rate us 😊. It's as if they need to be the centre of attention always. Sometimes, I wonder if we're following the delivery man or they're following us! It's frustrating to deal with boring notifications, but ur writing is so interesting sago
பதிலளிநீக்கு