சனிக்கிழமை சாயந்தரம்
மழை பெய்து ஓய்ந்த தருணம்
கண்ணை
மூடி தனித்திருந்தேன்
தனிமையோடு விழித்திருந்தேன்
விழிமூடி தவமிருந்தேன்
என்னைச்
சுற்றி யாரோ நடப்பது போன்ற சலனம்
கண் விழித்து அதிர்ந்தேன் ...
கட்டிலின் கடைசியில் சார்லஸ் புக்கோவ்ஸ்கி
கையில்
பாட்டிலும் வாயில் சுருட்டுமாய்
ஆனால்
அவரில் என்னை ஈர்த்தது
அவரது
பாட்டிலோ சுருட்டோ அல்ல
அவரது
கவிதைகள்:
'நான் மனிதர்கள் எவரையும் வெறுப்பதில்லை
ஆனால்
அவர்கள் அருகில் இல்லாதபோது
எனக்கு
நன்றாக இருக்கிறது'
எனது தனிமை விருப்பம், வேரூன்றி விருட்சமாய் வளர பெரிதும் உதவியது இவரின் வார்த்தைகள்.
அவருக்கு அருகில் 'முண்டாசு கவி பாரதி' கம்பீரமாய் உட்கார்ந்திருந்தான்.
பாரதியின் சொற்கள் அடிக்கடி என்னை அழவைக்கும்.
'சின்னஞ்சிறு கிளியே' எனக்கும் எனது மகளுக்கான இணைப்பு பாலம்.
'உச்சிதனை முகர்ந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி
உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி
சிலிர்க்குதடி'
'சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சலமாகுதடி
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி'
எனக்கும் என் மனையாளுக்கும், இடையிலான காதலை கற்றுக் கொடுத்தவனும் பாரதி தான்.
'பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
வீணையடி
நீ எனக்கு
மேவும்
விரல் நான் உனக்கு
வான்மழை
நீ எனக்கு
வண்ணமயில் நான் உனக்கு
வெண்ணிலவு நீ எனக்கு
மேவு
கடல் நான் உனக்கு
வீசுகமழ் நீ எனக்கு
விரியுமலர் நான் உனக்கு
தாரணியில்
வானுலகில்
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே!
கண்ணம்மா'
அடுத்ததாய்...
தீர்க்கமாய் பார்வை கொண்டு, கட்டிலின் மறு மூலையில், எதிர்பாரா விருந்தாளியாக ... ஜான் பால் சார்த்ர், பிரென்ச் தத்துவவாதி, மெய்யியலாளர்.
'இருத்தலியல்'
(EXISTENTIALISM) என்ற மெய்யியல் கோட்பாடு கொண்டவர்.
உலகின் ஒவ்வொரு எதார்த்தமும், பொருளும், உயிரும், ஏதோ ஒரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, நான் எழுதிக் கொண்டிருக்கும் 'பேனா'. எழுதுதல் தான் அதன் நோக்கம். அதனால் தான் இந்த உலகத்தில் படைக்கப்பட்டது.
நோக்கத்தினால் அதன் இருப்பு உருவாகிறது. Essence before existence.
ஆனால், மனிதர்களுக்கு என்று என்ன நோக்கம் இருக்கிறது? இதுவரை, எவரும் மனித வாழ்வின் நோக்கம் இதுதான் என வரையறுத்ததில்லை.
ஜே டி கிருஷ்ணமூர்த்தி சொல்வார்:
'வாழ்க்கைக்கு நோக்கம்
இருக்க
வேண்டிய
அவசியமில்லை.
வாழ்வதுதான் நோக்கம்'
ஜான்
பால் சார்த்ர் பொறுத்தவரை, மனிதன் தனது இருப்பை உறுதி செய்த பிறகு தான், தனது நோக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் உணர்கிறான். Existence before Essence.
1964 ல் உலக இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஜான் பால் சார்த்ர் அந்த பெருமைக்குரிய விருதை நிராகரித்து விட்டார். தன்னுடைய இருத்தலியல் கொள்கைப்படி, மனிதன் சுதந்திரமாக தேர்வும் செய்யும் உரிமை கொண்டவன். நோபல் பரிசு போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் பரிசைப் பெற்றுக்கொண்டால், அது தனது சுதந்திரமான விருப்பத் தேர்வுகளை பாதிக்கும் என உணர்ந்து, தனது மெய்யியல் கோட்பாட்டுக்காக அதை மறுத்தார்.
இந்த நிகழ்வு என்னை மிகவுமே பாதித்த நிகழ்வு. தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காத, கொள்கைகளின் படி வாழ்ந்து காட்டிய இவரை, எனது வாழ்க்கையை புரட்டி போட்ட மனிதர்களுள் ஒருவராக நான் கருதுவதில் பெருமை அடைகிறேன்.
இறுதியாக, பின்னிருந்து என் தோள்களைப் போற்றியவர் வள்ளுவர்.
வள்ளுவரின் வார்த்தைகளுக்கும்
புத்திசாலித்தனத்துக்கும்
புதுமைத்தனத்திற்கும்
இலக்கண அறிவிற்கும்
இயற்கை பற்றிய புரிதலுக்கும்
பொது அறிவுக்கும்
மெய்யியல் பார்வைக்கும்
வாழ்வியல் நெறிகளுக்கும்
சமீப
காலங்களில் அடிமையானவன் நான்.
கால்டுவெல்லும், வீரமாமுனிவரும் இல்லாது போயிருந்தால்,
இவ்வுலகு 'வள்ளுவன்' என்ற மகத்தான மனிதனை
அறியாது
போயிருக்கும். தெரியாது அழிந்திருக்கும்.
ரஷ்ய நாட்டில், க்ரெம்ளினில், அணுகுண்டு துளைக்க முடியாத பதுங்கு குழிக்குள், திருக்குறளின் ஒரு பிரதி பாதுகாக்கப்படுகிறதாம். இந்த உலகமே, முற்றும் அழிந்து விட்டாலும், இந்த ஒரு நூலை கொண்டு மீண்டும், அறம் சார்ந்த சமூகத்தை எழுப்பி விடலாம் என்று இந்த உலகம் நம்புகிறது.
ஈரோடு தமிழன்பன் சொன்ன வாக்கியங்கள் இன்னும் மனதில் ரீங்காரமிடுகின்றன:
'மானிட மேன்மையைச் சாதித்திட - குறள்
மட்டுமே போதுமே ஓதி நட'
குறளை படிச்சா மட்டும் போதாது
அதன்
படி வாழ சொல்றாரு
அப்படி
என் வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரு குறள்:
'இகழ்ந்தெள்ளாது ஈவாரைக்காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து'
இரண்டொரு தினங்களுக்கு முன் பள்ளிக்குள் நுழையும் முன் காலை சிற்றுண்டி முடிக்க அருகில் இருந்த உணவகத்துக்குச் சென்றேன். வழக்கம் போல் 2 பூரி சாப்பிட்டுவிட்டு 45 ரூபாய் கொடுத்துவிட்டு வண்டியை எடுக்க வந்த போதுதான், அந்த முதியவரை கவனித்தேன், அவர் என்னையே கவனித்து கொண்டு இருப்பதை.
நான்
அவரை கேட்க எத்தனிக்கும் முன்னே அவரே என்னை நெருங்கி உரிமையோடு புன்னகையோடு சாப்பிட ஏதாவது வாங்கி தரியா என்று கேட்டார்.
அவ்வளவு
பேர் நின்றிருக்க, பெரியவர் என்னை மட்டுமே கேட்டார். நானும் எப்பொழுதும் போல கடைக்காரரிடம் நாலு இட்லி கொடுங்க அண்ணன்னு சொல்லிட்டு காசு கொடுக்க போனபோது அந்த பெரியவர் என்னை மீண்டும் அழைத்தார்.
திரும்பி பார்த்த போது அதே புன்னகையோடு, ‘தம்பி எனக்கு இட்லி வேணாம் அதுக்கு பதில்லா நான் ரெண்டு தோசை வாங்கிக்கிறேன்னு’
சொன்னார்.
அப்போதுதான் என் மனசுக்குள் அந்த எண்ணம் சுருக்கென்று குத்தியது, ‘எடுக்குறது பிச்சை, இதுல இவருக்கு புடிச்சதுதான் சாப்புடுவாரான்னு’ ஆனால் சொல்ல வில்லை. எரிச்சல் தான் வந்தது என்னடா தர்மம் பண்ண போய் இப்புடி ஒரு நெலமை நம்மளுக்குன்னு.
நான் சாப்பிட்டது 45 ரூபாய் தர்மம் 80 ரூபாயா என்று மனசு புலம்ப தொடங்கியது. ஒரு வழியாக 80 ரூபாயை தாரை வார்த்து விட்டு அரை குறை மனதோடு பள்ளிக்கு வந்து சேர்ந்தேன். இருந்தாலும் மனசு ஒருமன பட்டதாக தெரியவில்லை.
அன்று பத்தாம் வகுப்பு மாணாக்கருக்கு திருக்குறள் நடத்த வேண்டும். கொடுக்கப்பட்ட அதிகாரம் 'இரவு' (BEGGING). நானும் குறட்களின் பொருளை எனக்கே உரிய பாணியில் சிறப்பாக சொல்லி கொண்டிருந்தேன்.
ஏழாம் குறளை வாசித்ததும் பேச்சின்றி நின்றேன். வள்ளுவர் அந்த குறள் மூலம் எதையோ எனக்கு சொல்ல முனைகிறார் என்ற உணர்வு மேலிட்டது.
"இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள்
உவப்பது உடைத்து"
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
வள்ளுவர் வார்த்தைகள் வலுவாக என்னை பாதித்தது.
பொருள்
இல்லாதவன் பொருளை தானே இழந்து விட்டான்,
தனது
உரிமையை கூடவா இழந்து விடுகிறான்?
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என சும்மாவா சொன்னார் வள்ளுவர்.
இரப்பவர்கள் தங்களது தேவைகளை கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறார்களா என்ன? என்று எனது உலகப் பார்வையை உலுக்கி சென்றவர் வள்ளுவர். இதைபோல் எத்தனை எத்தனை மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வந்தவர் வள்ளுவர்.
சிறிய அலுக்கம் கொண்டு சுற்றிப் பார்த்தேன்.
நான்
எனது அறையில், தனியே தன்னந்தனியே ...
ஆனாலும்
அன்றுதான் உணர்ந்தேன் என்னைச் சுற்றி
என் அறையில் எத்தனை எத்தனை
உயந்த
மனிதர்கள்,
தகுதி
வாய்ந்த ஆளுமைகள்
நான்
நினைக்கும்போதும், நினையாத நேரங்களிலும்
அருகில்
அமர்ந்து என்னை வழிநடத்த உள்ளார்கள்
என நினைத்து புத்தகப் பக்கங்களில் புதைந்தேன்.
பொது
வாழ்வில் நேர்மையும்
தனி வாழ்வில் கண்ணியமும்
அக வாழ்வில் அறமும்
புற வாழ்வில் புகழோடு வாழ
புத்தகங்கள் மட்டுமே நமக்கு கதி.
புத்தகங்கள் என்பது காகிதங்கள் மற்றும் எழுத்துருக்களை மட்டுமே கொண்டிருக்கும் கலவை இல்லை. அதற்கும் ஒரு படி மேலே. அதாவது, தங்கள் காலை உணவு அனுபவத்தை பகிர்ந்து கொண்டது போல, சிந்தனையாளர்களின் அனுபவத்தை படிப்பவர்கள் சிந்தனையோடு சேர்த்து புதிய படைப்புகளை கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்..நன்றி
பதிலளிநீக்கு