சிறு முடிவுகளின் பெரு விளைவுகள்
(TYRANNY OF SMALL DECISIONS)
கல்லூரி காலங்களில், 90 களின் இறுதியில், மாணவர்களிடையே கடிதப் போக்குவரத்து அதிகமாய் பயன்பாட்டில் இருந்தது. பெற்றோர்கள், நண்பர்களுடனான தொடர்பை துண்டிக்காமல் ஒட்ட வைத்தது கடிதங்கள்
தான்.
கடிதம் பெற்றவர்கள் களிப்போடு களைந்து போவதையும்
கடிதம் பெறாதவர்கள் கவலையோடு தொலைந்து போவதையும்
கண்டிருக்கிறேன்;
அனுபவித்தும் இருக்கிறேன்.
அந்த ஒரு கடிதம் மிச்சமுள்ள
நாளின் உணர்வை நிர்ணயிக்கும். அந்த கடிதங்கள் எத்தனை
எத்தனை உணர்வுகளை கொண்டு சேர்த்திருக்கும். எவ்வளவு அழுகைகளையும், சிரிப்புகளையும் கொடுத்திருக்கும். அவமானம், கோபம், வெட்கம், காதல், மோதல், சீற்றம், மன்னிப்பு, ஏக்கம் எத்தனை எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கும்.
“எவ்வாறு
நாம்
நம்மையும்
அறியாமல்,
வாழ்க்கையின்
காலப்போக்கில்
எடுக்கும்
மிகச்
சிறிய
முடிவுகளால்
(பெரும்
நோக்கத்தோடு
எடுக்கப்பட்ட
முடிவுகள்
அல்ல),
பெரும்
பாதிப்பை
தரக்கூடிய
விளைவுகளை
நம்
வாழ்வில்
ஏற்படுத்தி
உள்ளோம்
என்பதை
உணர்ந்தேன்”
1995 ஜூலை 31 தான் முதன் முதல் அலைபேசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் அலைபேசி மாணவர்களின் கைகளை ஆக்ரமித்துவிட்டது. SMS என்ற குறுஞ்செய்தி இலவசமாக அலைபேசியில் இருந்த காலம், அதுவும் அளவில்லாமல் அனுப்பலாம் என்ற கவர்ச்சியும் இணைந்து கொண்டது. அப்போது தான் கடிதங்கள் எழுதி அன்பை பகிர்ந்து கொண்டிருந்த நானும், என்னை போன்ற கோடிக்கணக்கானவர்களும் எங்களையும் அறியாமல், ஒரு சிறு முடிவை சாதாரணமாக எடுத்தோம்.
என்ன முடிவு அது?
கடிதம் எழுதுவதற்கு பதிலாக, இலவசமாக குறுஞ்செய்தியை அனுப்பலாம் என்ற சிறு முடிவு
தான் அது. முடிவு எடுத்த
அனைவரும் தனி தனியாக, பெரிய
உள்ளார்ந்த நோக்கமின்றி, எதேச்சையாக எடுத்த சிறு முடிவு தான்,
இருபது வருடங்களில், உயிரோட்டமுள்ள, உணர்வு மிக்க உறவின் பாலத்தை, கடிதப் போக்குவரத்தை, இல்லாமல் ஆக்கி விட்டது.
இன்று நாம் திறன்பேசிகளை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டோம். ஆனால் நமது தொடர்புகள் இன்று உயிரற்று, உணர்வற்று இருக்கிறது. யாரோ யாருக்கோ அனுப்பிய செய்திகளை, நாம் நமதாக்கி நம்முடையவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அது மீண்டும் மீண்டும் யார் யாருக்கோ அனுப்பப்படுகிறது.
இந்த நூறு நபர்களின் முடிவுகளின்
விளைவாக X என்ற விளைவு ஏற்படுகிறது.
அதாவது 100 x = X
இந்த நூறு நபர்களுக்கும் அந்த
விளைவில் X உடன்பாடா என நேரடியாய் கேட்டால்,
கட்டாயம் இல்லை என்றே சொல்வர்.
ஆனால் அந்த நூறு பேரின் முடிவு (x ) தான், இந்த விளைவின் (X) ஆதாரம் என்றால் நம்புவீர்களா?
'சிறு துளி பெரு வெள்ளம்' இது சேமிப்பை மட்டும் குறிக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிறு துளியாய் அணையின் தண்ணீர் ஒழுகும்போதே அதை சரி செய்து விட வேண்டும், இல்லையேல் அது பெரு வெள்ளமாய் நம்மை அழித்து விடும். சிறு முடிவுகளின் பெரும் விளைவுகளை சிந்தித்து செயல்பட்டால், பேரவதியை தவிர்க்கலாம்.
ஆன்லைன் ஆர்டர் செய்யவேண்டாம் என சொல்ல முடியாது ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி செய்வதை தவிர்த்து, நம்மை சுற்றி இருக்கும் சிறு, குறு வியாபாரிகளை ஊக்குவிக்கலாம்.
பெரும் பாதிப்பு தரும் விளைவுகளை தவிருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக