‘விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்’
என்ற
பாரதியின் வரிகளை படிக்க படிக்க உள்ளம் குமுறுகிறது.
பாரதியும்,
பாரதிதாசனும், பெரியாரும் இன்னும் பற்பல சான்றோரின் போராட்டத்தில் பிறந்தது தான் இந்த மண்ணின்
பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்களை பிள்ளையாய் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டல்லவா இருக்கின்ற காலம் இது.
மார்ச்
8ம் தேதி வந்து விட்டது.
பெண்கள் தினத்தை பற்றி வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களும் போஸ்ட்களும் வந்து குவியும்.
அரசு
பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றும்.
டிவி
க்களும் பெண்களை போற்றி ‘சிங்கப்பெண்ணே’ என்று ஒரு பக்கம் உணர்ச்சி
பொங்க வைத்து மக்களை கண்ணீரில் மூழ்கடிக்கும்.
பள்ளிகளிலும்
அலுவலகங்களிலும் பெண்களை சிறப்பாக
மரியாதை செய்வார்கள். அவர்களும் ஒரே வண்ண புடவையில்
வந்து தங்களின் பெண்மையை வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க,
விளம்பரங்களும் வியாபாரங்களும் பெண்ணை விண்ணுக்கு உயர்த்தி விலை பேசி கொண்டிருக்கும்.
24 மணி
நேரத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்பதே
என்னுடைய ஆச்சர்யம்.
‘பெண் பின் தூங்கி
முன்
எழுவாள்’
கணவனுக்காகவும்
தன் குடும்பத்துக்காகவும் வழக்கம் போல் சமையல், வீடு
வேலை, பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல். இன்னும்
மார்ச் 7 இல் செய்த அதே
routine க்கு திரும்பி இருக்க வேண்டும். அடுத்த மரியாதை அடுத்த மார்ச் 8 இல் கிடைக்கும்.
வேலை
பார்க்கும் இடங்களில் பெண் வழக்கம் போல்
ஒரு காட்சி பொருளாக பார்க்கப்படுவாள். அவள் உழைப்பால் உயர்ந்தாலும்
அதை உள்ளர்த்ததோடு தான் ஆண்கள் புரிந்து
கொள்வார்கள். பெண் முன்னுக்கு வந்தால்
அது அவள் அழகினால் மட்டும்தான் என்று நம்புவார்கள்.
‘சிங்கப்பெண்ணே’
என்று வரிந்து கட்டிய டிவி க்கள் ‘இன்னுமொரு
ஹாசினி,
இன்னுமொரு
ஆர்த்தி’
என்று பெண் வன்புணர்ச்சியை விவாதப்பொருளாக
TRP ஏற்ற முயற்சித்து கொண்டு இருக்கும்.
என்ன
தான் செய்ய வேண்டும்? என்று கேட்கிறீர்களா?
வருடம்
தவறாமல்
பெண்கள்
தினம்
கொண்டாடுபவர்களே!
இனிமேல்
தினங்களை
விட்டு
விட்டுக்
பெண்களை
எப்போது
கொண்டாடப்
போகிறீர்கள்?
அவர்களின்
வீட்டு வேலையை
பகிருங்கள்.
அவர்
துணி துவைத்தால், நீங்கள் காய போடுங்கள்
அவர்
துணி மடித்தால், நீங்கள் அடுக்கி வையுங்கள்
அவர் சமையல் செய்தால், வேண்டிய பொருட்களை வெட்டி கொடுங்கள்
குறைந்தது அவரோடு கூடவாவது நில்லுங்கள்
இன்னும் பல ஆண்களுக்கு எது பாசி பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு என்ற வித்தியாசம் கூட தெரியாது. சமையலறை என்ற உலகத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
'சமைப்பதும் வீட்டுவேலை
சலிப்பின்றிச்
செயலும்
பெண்கள்
தமக்கேஆம்
என்று
கூறல்
சரியில்லை
ஆடவர்கள்
நமக்கும்
அப்
பணிகள்
ஏற்கும்
என்றெண்ணும்
நன்னாள்
காண்போம்
சமைப்பது
தாழ்வா
இன்பம்
சமைக்கின்றார்
சமையல்
செய்வார்'
பாரதிதாசன்அன்றே சொன்னார் ஆண்களும் வீட்டு வேலைகளை ஏற்கும் நன்னாள் வரவேண்டும் என்று. அது தான் உண்மையான பெண்மையின் கொண்டாட்டம்.
அவர்
பாத்திரம் கழுவினால், அதை வாங்கி துடைத்து,
வைக்க வேண்டிய இடத்தில் வைய்யுங்கள்
அவரோடு
சேர்ந்து வீடு துடையுங்கள்
ஒட்டடை
அடியுங்கள்
கடைக்கு போங்கள்
அலுவலகத்தில்,
பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்
வளர வழிவிடுங்கள்
அவர்களின்
உடையையோ உடலையோ குறித்து சொல்லாடல்களை தவிருங்கள்
நமது
வீட்டு பெண் அங்கு வேலை
செய்தால் எவ்வாறு நடத்த பட வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை போல் மற்ற
பெண்களையும் நடத்துங்கள்.
ஒரு பெண், எந்த ஆண் மகனிடம்
பயமின்றி மனம் விட்டு சிரித்து
பேசி அருகில் நிற்கின்றாலோ, அவன் தான் உண்மையான
ஆண் மகன் என்பதை உணருங்கள்.
அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்காதீர்கள்.
பெண்
சிரித்து பேசி விட்டால், அவளின்
கற்பை கொச்சை படுத்தாதீர்கள்.
“பெண்ணறத்தனை
ஆண்மக்கள்
வீரந்தான்
பேணுமாயின்
பிறகொரு
தாழ்வில்லை
கண்ணைக்
காக்கும்
இமை
மிரண்டின்மை
போலவே”
பெண்ணின்
பெருமையை, பெண்ணின் நலனை, பெண்ணின் சுயமரியாதையை, ஆண்மக்கள் காக்க வேண்டும். அதனால் ஆண்மை தாழ்ச்சி அடையப்போவதில்லை. கண்ணை இமை காப்பதால் இமைக்கென
தாழ்ச்சியா?
இந்த பெண்கள் தினத்தில்
ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும்
பெண்ணை எப்படி மரியாதையோடு
நடத்த வேண்டும் என சொல்லாதீர்கள்
செய்து காட்டுங்கள்
உங்கள் வாழ்க்கை
உங்கள் வார்த்தையை விட வலிமையானது
பெண்ணுக்கு நல்ல தொடுதல் தீய தொடுதல் சொல்லி கொடுப்பதற்கு பதில்,
பெண்ணை அனாவசியமாய் தொடாதே
மரியாதையை நடத்து என்பதை ஆண் பிள்ளைகளுக்கு வாழ்ந்து காட்டுவோம்
பெண்களை
மதிப்போம், கொண்டாடுவோம்
மார்ச்
8 இல் மட்டும் அல்ல எல்லா நாளும்.
பெண்கள் தினத்தை விட்டு விட்டு பெண்களை கொண்டாடுவோம்.
மீண்டும் இம்மண்ணில் பாரதி! நன்றி சகோதரா🙏
பதிலளிநீக்குபெண் சமத்துவம் வளர்க
நீக்கு