இறைவனுக்கும் மனிதனுக்குமான உறவு ரொம்பவே விசித்திரமானது.
'உள்ளத்திலே கர்வம்கொண்ட போதினில்
ஓங்கியடித்திடுவான்;
நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
காறியுமிழ்ந்திடுவான்;
பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு
தவிர்த்திடுவான்'
இலக்கியங்களை
நமக்கு கொடுத்து, அதை நம்மை படிக்கவும்
வைத்து
அழவும்
வைக்கும் இந்த பிரபஞ்சத்தை எண்ணி
சிரிப்பதா? அழுவதா?
பாரதியின் இந்த வரிகளைப் படிக்க நேர்ந்தது.
படித்த
கணம் முதல் அழுகையை நிறுத்த முடியவில்லை.
கடவுளுக்கும்
நமக்குமான உறவு ரொம்பவே புதிரானது.
‘எல்லாம் வல்ல இறைவன் நம்
சுதந்திரத்தின் முன் மண்டியிடுகிறான்
நிர்கதியான இறைவன் முன்
நாம் ஏதோ ஒன்றுக்காக சரணாகதி அடைகின்றோம்’
'நினைப்பதெல்லாம்
நடந்து
விட்டால்…
ஐயோ வேண்டாம்’ :
'நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால், தெய்வம் ஏதும் இல்லை'
இந்த
வரிகளை எழுதும்போது கவிஞரின் மனதில் என்ன ஓடியிருக்கும்?
நாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், என்னவாகும்?
சற்று
சிந்தித்து பாருங்களேன்.
நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் அது நமக்கு கிடைக்கும்
சாபக்கேடு தான். அதுமட்டுமல்ல, நமக்கு எதெல்லாம் தேவையோ, அதையெல்லாம் நம்ம யாருகிட்ட கேட்போம்?
கடவுள்
கிட்ட தானே.
ஒரு
வேளை நமக்கு நினைப்பதெல்லாம் கிடைத்து விட்டால், கடவுள் பற்றிய ஒரு துளி சிந்தனையும்
நமக்கு இருக்காதுதானே. எதார்த்தமான உண்மையை, ஒரு வரியில் சொல்லி
விட்டு போய்விட்டார் கவிஞர்.
ஆங்கில
இலக்கியத்தில், இதை ஒரு முழு
பாடலாகவே எழுதிய வரலாறு உண்டு.
கப்பி – PULLEY :
ஜார்ஜ்
ஹெர்பர்ட் எழுதிய "கப்பி" (1633) ஆங்கிலத்தில் 'Pulley' என்ற கவிதையை தான்
நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். கப்பி என்பது கிணற்றில் இருந்து நீர் இறைக்க நாம்
பயன்படுத்தும் சக்கரம் போன்ற ஒரு கருவி. ஒரு
பக்கம் நாம் கயிறை கீழ்
நோக்கி இழுக்க, கீழிருந்து தண்ணீரை மேல் நோக்கி அது
இழுக்கும்.
ஏன்
'கப்பி' என்ற பெயர்க்காரணத்தை பிறகு
காண்போம். முதலில், கவிஞர்களை பார்ப்போம்.
ஹெர்பர்ட்டும் கண்ணதாசனும்:
330 ஆண்டுகள் இடைவெளி, வெவ்வேறு கண்டங்கள், வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் தனித்துவமான கட்டமைப்புகளால் பிரிக்கப்பட்டிருந்த போதிலும், ஹெர்பர்ட்டும் கண்ணதாசனும் ஒரே உளவியல் மற்றும் ஆன்மீகக் கருத்தை கையாண்டுள்ளது பெரும் வியப்பை உண்டாக்குகிறது.
ஆன்மீக மறதி :
மனிதர்கள் தாங்கள் விரும்பும் அனைத்தையும் பெறும்போது, தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக ஒரு மாயையை வளர்த்துக் கொள்கிறார்கள். மனிதனின் தன்னிறைவு, இறைவனை மறக்கடிக்கிறது. ஆன்மீக மறதியை உருவாக்குகிறது:
ஆன்மீக நினைவூட்டல்:
மனிதனின்
குறைபாடுகள் - விரக்தி,
மனக்கவலைகள், நிறைவேறாத ஆசைகள் மற்றும் மனச்சோர்வு ஆகியவை ‘எல்லாவற்றுக்கும் முற்று புள்ளியாய் இறைவன் இருக்கின்றான்’ என்ற ஆன்மீக நினைவூட்டலைச்
செய்கின்றன. அவை மனித அகந்தையைப்
பணிவுடன் வைத்திருக்க உதவுகின்றன.
படைப்புச் சம்பவம்:
மனிதனைப் படைக்கும்போது,
மனித இருத்தலுக்குத் தேவையான அனைத்து நற்பண்புகளையும் உள்ளடக்கிய "ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு கோப்பையை" ஏந்தி
நிற்கும் ஒரு கைவினைஞராகக் கடவுள்
சித்தரிக்கப்படுகிறார்.
மனிதர்களைப்
படைக்கத் தொடங்கும்போது, கடவுள் அவர்களுக்கு 'வலிமை, அழகு, ஞானம், நன்மதிப்பு மற்றும் இன்பம் போன்ற, உடல் மற்றும் அறம்
சார்ந்த பண்புகளை ஒவ்வொன்றாக தாராளமாக
வழங்குகிறார்.
இருப்பினும், அந்தக் கோப்பையிலிருந்து ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அவர் கொடுத்து கொண்டே கோப்பையை காலி செய்யும் நிலையில், மிச்சமிருக்கும் இறுதி ஆசிர்வாதத்தை — அதாவது 'மன நிம்மதி' என்னும் 'மன நிறைவை'—வழங்குவதற்கு முன் கடவுள் சற்றுத் தயங்கி நிற்கிறார்.
சர்வ
வல்லமையுள்ள கடவுளே, இந்த கடைசி ஆசிர்வாதத்தை
மனிதருக்கு கொடுக்க தயங்குகிறார். நிம்மதியை கொடுத்து விட்டால், அது மனிதரின் பக்தியின்
தன்மையில் ஒரு ஆபத்தான மாற்றத்தை
ஏற்படுத்திவிடும் என்பதை அவர் உணர்கிறார்.
என்ன மாற்றம்?
என்ன
ஆபத்து?
இவ்வுலக
சார்ந்த இன்பங்களால் மிகுந்த திருப்தி அடைந்துவிடும் மனிதர்கள், படைத்தவரை வழிபடுவதற்குப் பதிலாகப் படைப்பையே வழிபடத் தொடங்கிவிடுவார்கள்; அதாவது, "இயற்கையின் இறைவனை" வணங்காமல் "இயற்கையை" மட்டுமே போற்றுவார்கள்.
‘படைக்கும் கடவுளுக்கு
தெரியாதா
படைத்தவற்றின்
குணத்தை
பற்றி’
இத்தகைய
சூழல், "இருவருக்குமே பேரிழப்பை தரும்" என்று கடவுள் உறுதியாக நம்பினார்.
கடவுள்
தனது படைப்பின் உச்சமாகிய மனிதனின் பக்தியை இழப்பார்;
மனிதர்களோ,
நிலையற்ற உலக இன்பங்களிலேயே திருப்தியடைந்து
நித்தியமான மீட்பை இழந்துவிடுவார்கள்.
நிம்மதியின்மை :
ஹெர்பர்ட்டின்
பார்வையில், 'நிம்மதியின்மை' என்பது மனிதகுலத்தை மெதுவாக தன் பக்கம் இழுத்துக்
கொள்ள படைத்தவன் பயன்படுத்தும் 'கப்பி' மனிதருக்கே தெரியாமல் தன் படைப்பை தன்னை
நோக்கி இழுக்கும் கண்ணுக்கு புலப்படாத கயிறாகும்.
"The Pulley" (கப்பி) என்ற கவிதையின் மையக் கருத்து, 'மனித இருத்தலில் வெற்றிடமே' மனித வாழ்வை வரையறுக்கிறது என்று ஹெர்பர்ட் கருதுகிறார்.
உதாரணமாக,
தமிழ்க் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகளான "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை" என்பதில்—இதே போன்றதொரு புரிதலை
நாம் காண முடிகிறது.
அதாவது, 'முழுமையான மனநிறைவு' என்பது ஒருவித ஆன்மீக மறதியை (spiritual amnesia) உருவாக்கிவிடுகிறது.
எவ்வளவோ
வெற்றி பெற்றாலும்,
எவ்வளவோ
புகழ் சேர்ந்தாலும்,
எவ்வளவோ
அழகு அடைந்தாலும்,
எவ்வளவோ
நன்மதிப்பு பெற்றாலும்,
எவ்வளவோ
இன்பமுற்றாலும்,
இறுதியில்
ஒரு நிம்மதியற்ற ஒரு சூழலே மனிதனுக்கு
ஏற்படுகிறது.
இந்த
நிம்மதியற்ற தன்மையே நம்மை இறைவனை நோக்கி நம் உள்ளங்களை எழுப்புகிறது.
புனித அகுஸ்தினார் சொல்வது போல,
'உம்மில்
இளைப்பாறும் வரை
எங்கள்
இதயங்கள் அமைதியற்றிருக்கின்றன'
அடுத்த
முறை, கண்ணதாசனின் வரிகளை கேட்கும்போது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் இறைவன் நம்மை
அவரை நோக்கி இழுக்கிறார் என்பதை உணர்வோம்.
👌👌🙏
பதிலளிநீக்குநன்றி
நீக்குஎழுத்துக்கள் சிந்தனையைத் தூண்டுவதாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளன.
பதிலளிநீக்குதங்கள் உத்வேகத்துக்கு நன்றி
நீக்குMighavum atpudamana sidhikkavaikkum padivu.Nandri nanbarey.
பதிலளிநீக்குஆண்டவரை தினமும் தேடவே நம்முடைய எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவு அடையாமல் இருக்கிறதோ ?? முற்றிலும் உண்மை 👍🙏✝️
நீக்குதங்கள் ஊக்கத்திற்கு நன்றி
நீக்குநன்றி
நீக்குநினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்... நினைத்ததெல்லாம் எழுதிவிட்டால்....
பதிலளிநீக்குஇரண்டும் முடியாது...
அருமை ராபி...
உண்மைதான். எழுத நினைப்பதொன்று எழுதி முடிப்பதொன்று. கைதான் என்னுடையது எழுத்துக்கள் அவனுடையவை.
நீக்குகடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு ரொம்ப வித்தியாசமானது தான். அம்மா பிள்ளைகள் மாதிரி - சண்டை போட்டாலும் விட்டுட மாட்டோம். அழகா எழுதிருக்கீங்க.
நீக்குஉண்மைதான் நாதலீன். மிகச் சரியாக சொன்னீர்கள். உங்கள் பகிர்வுக்கு நன்றி
நீக்குSago, what a wonderful essay! I felt like I was reading a book by great authors. Of course you are great too. There’s so much information in it, and the pictures related to the topics made it even better. The way you compared different authors’ views, and especially the poem about "pulley" — no words! Vera level 👏 This essay actually pulls me to read again and again, just like a pulley. Keep writing like this. Proud of you sago💐
பதிலளிநீக்குThanks Sago. It means a lot.
நீக்கு