ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

சோளக்காட்டு பொம்மை (Adaptation of 'The Scarecrow' by Khalil Gibran - 'The Madman')

கடந்த வருடம்...


வயல்வெளி ரசித்து கடந்து போகையில் 

தன்னந்தனியனாய் நின்றிருந்தாய் 

பயம் காட்டும் சோளக்காட்டு பொம்மையாய் 



சற்றே அருகே போய் பார்த்தேன் பயத்தோடு 

யாரை பயமுறுத்த நின்றிருக்கிறாய் என்றேன் 

பறவைகளையும் குருவிகளையும் தான் என்றாய் 


ஓ அது சரி அது சரி கேட்க நினைத்தேன் 

தனிமையில், ராவும் பகலுமாய், மழையிலும் வெயிலிலும் 

பொறுமையாய் நின்றிருக்க வலிக்கவில்லையா என்றேன் 


எனது பயணம் தெளிவாக இருக்கும்போது வலி ஏது?

பயமுறுத்தி மகிழ்வதன் இன்பம் அலாதி, என்றாய் 

நானும் அரை நிமிட அமைதிக்குப்பின் ஆமோதித்தேன் 


உனக்கும் பயம் தருவது இன்பமா? என்றாய்

'வாய்ப்பே இல்லை' என ஏளனமாய் சிரித்தாய் 

இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் 


பொம்மை சொன்ன வார்த்தைகள் உண்மை பேசியதை உணர்ந்தேன் 

அவனிடமிருந்து விலகி வந்து சற்றே யோசித்தேன் 

அது புகழ்ச்சியா? இகழ்ச்சியா? இல்ல வஞ்சப்புகழ்ச்சியா?


மீண்டும் ஓர் ஆண்டு கழிந்து ...


மீண்டும் வயல் கடந்து போகையில் அதே வயலில் சந்தித்தேன் 

பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை அவனிடம் அந்த ஒன்றை தவிர 

அவன் கழுத்துக்கு கீழ் ஓர் 'குருவிக்கூடு'


இதயமற்ற வெற்றுடலுக்கே இரக்கம் துளிர்க்குமெனில் 

சோளக்காட்டு பொம்மையே அன்பு காட்டுமெனில் 

இதயம் கொண்ட எனக்கு என்ன தகுதி இல்லை?





 

24 கருத்துகள்:

  1. சிந்தையை கொத்தி களை எடுப்பது போன்று ஒரு பதிவு சார்
    அதிலும்
    "இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் "
    இந்த வரிகள் அற்புதம் 👌🤝💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை கவர்ந்த வரிகள், உங்களையும் கவர்ந்தது மகிழ்ச்சி

      நீக்கு
  2. இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் semma👌

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான கோணத்தில் ஒரு நல்ல சிந்தனை

    பதிலளிநீக்கு
  4. தனிமையில் அனைத்தையும் ரசித்து நிற்கும் இந்த சோளக்காட்டு பொம்மைப் போல் எனக்கும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. நினைத்துப் பார்த்தால் இனி மை.அருமையான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு அந்த வாய்ப்பு எப்போதும் உள்ளது. நம்மால் தான் அமைதியாய் இருக்க முடியாமல் வாய் திறந்து பேசி வாய்ப்பை தவற விடுகிறோம்

      நீக்கு
  5. அருமையான சிந்தனை, வாழ்த்துக்கள் 👌

    பதிலளிநீக்கு
  6. உரையாடல் என்னவோ சோளக்காட்டு பொம்மையுடன் தான் ஆனால் பகிர்ந்த கருத்துகள் உயிருள்ளவை... அருமை... ஆழம் மிகுந்தவை 👏👏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் பல

      நீக்கு
  7. I m speechless after reading this sago.I m impressed with the line எனது பயணம் தெளிவாக இருக்கும்போது வலி ஏது?
    Each one of us can take it as a motivational line which we are facing in our day to day life i feel like ,i m strenghthened with this line .Thank u sago .continuei mpressing us .

    பதிலளிநீக்கு
  8. I feel like strengthened after reading the line
    எனது பயணம் தெளிவாக இருக்கும்போது வலி ஏது?.such a great words to motivate ourselves sago .I m speechless, started self evaluating myself.

    பதிலளிநீக்கு
  9. ​Reading this story about the seven selves made me realize how many different feelings I have inside me. Sometimes I feel happy like Joy, and sometimes I feel quiet and empty like the Seventh Self. Instead of feeling alone, I realize this quietness is actually a peaceful place to rest. It's interesting to see that these different sides of ourselves are always there with us moulding our lives.

    பதிலளிநீக்கு
  10. ஜான் பெர்னாட்

    எனக்கு அந்த ஏழாம் சுயம் சொல்வது தான் நியாயம் எனப்படுகிறது மற்ற ஆறு பேரும் நம்மை விட்டு விலகினால் அந்த ஏழாம் சுயம் வேலைக்கு வந்துவிடும் அதனால் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நாட்கள் மற்ற ஆறு பேரும் இருக்கட்டுமே எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. உணர்ச்சிகளால் இயக்கப்படும் எந்திரமான மனிதன். ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் வாழ்க்கை இனிக்காது.

    பதிலளிநீக்கு