கடந்த வருடம்...
வயல்வெளி ரசித்து கடந்து போகையில்
தன்னந்தனியனாய் நின்றிருந்தாய்
பயம் காட்டும் சோளக்காட்டு பொம்மையாய்
சற்றே அருகே போய் பார்த்தேன் பயத்தோடு
யாரை பயமுறுத்த நின்றிருக்கிறாய் என்றேன்
பறவைகளையும் குருவிகளையும் தான் என்றாய்
ஓ அது சரி அது சரி கேட்க நினைத்தேன்
தனிமையில், ராவும் பகலுமாய், மழையிலும் வெயிலிலும்
பொறுமையாய் நின்றிருக்க வலிக்கவில்லையா என்றேன்
எனது பயணம் தெளிவாக இருக்கும்போது வலி ஏது?
பயமுறுத்தி மகிழ்வதன் இன்பம் அலாதி, என்றாய்
நானும் அரை நிமிட அமைதிக்குப்பின் ஆமோதித்தேன்
உனக்கும் பயம் தருவது இன்பமா? என்றாய்
'வாய்ப்பே இல்லை' என ஏளனமாய் சிரித்தாய்
இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய்
பொம்மை சொன்ன வார்த்தைகள் உண்மை பேசியதை உணர்ந்தேன்
அவனிடமிருந்து விலகி வந்து சற்றே யோசித்தேன்
அது புகழ்ச்சியா? இகழ்ச்சியா? இல்ல வஞ்சப்புகழ்ச்சியா?
மீண்டும் ஓர் ஆண்டு கழிந்து ...
மீண்டும் வயல் கடந்து போகையில் அதே வயலில் சந்தித்தேன்
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை அவனிடம் அந்த ஒன்றை தவிர
அவன் கழுத்துக்கு கீழ் ஓர் 'குருவிக்கூடு'
இதயமற்ற வெற்றுடலுக்கே இரக்கம் துளிர்க்குமெனில்
சோளக்காட்டு பொம்மையே அன்பு காட்டுமெனில்
இதயம் கொண்ட எனக்கு என்ன தகுதி இல்லை?
சிந்தையை கொத்தி களை எடுப்பது போன்று ஒரு பதிவு சார்
பதிலளிநீக்குஅதிலும்
"இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் "
இந்த வரிகள் அற்புதம் 👌🤝💐
என்னை கவர்ந்த வரிகள், உங்களையும் கவர்ந்தது மகிழ்ச்சி
நீக்குஇதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் semma👌
பதிலளிநீக்குநன்றி
நீக்குவித்தியாசமான கோணத்தில் ஒரு நல்ல சிந்தனை
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குதனிமையில் அனைத்தையும் ரசித்து நிற்கும் இந்த சோளக்காட்டு பொம்மைப் போல் எனக்கும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. நினைத்துப் பார்த்தால் இனி மை.அருமையான பதிவு சார்.
பதிலளிநீக்குநமக்கு அந்த வாய்ப்பு எப்போதும் உள்ளது. நம்மால் தான் அமைதியாய் இருக்க முடியாமல் வாய் திறந்து பேசி வாய்ப்பை தவற விடுகிறோம்
நீக்குஅருமையான சிந்தனை, வாழ்த்துக்கள் 👌
பதிலளிநீக்குநன்றி
நீக்குஉரையாடல் என்னவோ சோளக்காட்டு பொம்மையுடன் தான் ஆனால் பகிர்ந்த கருத்துகள் உயிருள்ளவை... அருமை... ஆழம் மிகுந்தவை 👏👏
பதிலளிநீக்குஉண்மைதான். தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் பல
நீக்குநன்று நன்று
பதிலளிநீக்குநன்று நன்று...
பதிலளிநீக்குநன்றி தம்பி
நீக்கு